கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

இது மனித குலத்திற்குக் கடவுளின் இறுதிச் செய்தியாகும். கடவுளின் அனைத்து நபிமார்களும் இவ்வுலகிற்கு வந்து விட்டனர், மேலும் அனைத்து வேதங்களும் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டன. கடவுளின் நபிமார்கள் சேர்ப்பித்த எல்லாச் செய்திகளையும் தூய்மைப்படுத்தி, ஒன்றிணைத்து ஒரே செய்தியாக்கி, இதன்

Find out more
எளிய உண்மைகள்

மாபெரும் அற்புதங்களில் ஒன்று

 

எளிய உண்மைகள்

குர்ஆனாகிய அதனைப்போலவே,​​ குர்ஆனின் கணிதக்​​ குறியீடும் மிக எளிதானவற்றிலிருந்து,​​ மிகவும் சிக்கலானவை வரை விரிந்த எல்லை கொண்டதாக உள்ளது. எளிதான உண்மைகளானவை கருவிகள் எதனையும் பயன்படுத்தாமல் உறுதிப்படுத்திக்கொள்ள இயன்ற. சிக்கலானவற்றிற்கு ஒரு கணக்கிடும் கருவி அல்லது கணிணியின் உதவி அவசியமாகின்றது. 

Find out more

Exploring

குர்ஆன் ஹதீஸ்​​ &​​ இஸ்லாம்

 இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குர்ஆன் வசனங்களில் “அல்லாஹ்” என்ற சொல் இடம் பெறும் இடங்களில் “கடவுள்” என்ற சொல்​​ பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்ராஹிம்,​​ இஸ்மாயில்,​​ ஈஸா மற்றும் நபி ஆகிய பெயர்கள் முறையே ஆப்ரஹாம்,​​ இஸ்மவேல்,​​ இயேசு மற்றும் வேதம் வழங்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும். 

Learn More

19 MiracleCode: படைப்பாளரின் கையொப்பம்

  

கடவுளின் படைப்புக்களில் வேதங்கள் மட்டுமே 19 எனும் எண்ணைப் பொது வகு எண்ணாகக் கொண்டு கணிதரீதியில் தொகுக்கப்பட்டவையாக இல்லை. கலிலியோ தன்னுடைய பிரசித்தி பெற்ற கூற்றைக் கூறியது உண்மையிலே மிகவும் ஆழ்ந்ததாகும் 'கணிதமெனும் மொழியில் தான் கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்." அபரிமிதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் குறிப்பிட்ட படைப்புகள் மீது 19 எனும் எண் கடவுளின் கையொப்பமாகத் திகழ்கின்றது என்பதை இப்போது காட்டி உள்ளன. மைக்கேலேஞ்சலோ மற்றும் பிகாஸோவின் கையொப்பங்கள் அவர்களுடைய கலைப் படைப்புகளை அடையாளம் காட்டுகின்ற தோராயமான அதே விதமாக இப்பிரபஞ்சம் முழுவதிலும் இந்த தெய்வீக முத்திரை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு:

1.ஒவ்வொரு 19 வருடங்களுக்கு ஒரு முறை சூரியன், சந்திரன், மற்றும் பூமியானவை ஒத்த அதே நிலைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன. 

Learn More

நாம் ஏன் படைக்கப்பட்டோம்?

  

 

மிகப் பயங்கரமானதொரு குற்றத்தை நாம் புரிந்ததன் காரணமாகவே இந்த உலகில் நாம் இருக்கின்றோம். அத்துடன் இந்த வாழ்வானது நம்மை மீட்டுக்கொள்வதற்கு, நமது குற்றத்தைப் பழித்துரைத்து கடவுளின் சாம்ராஜ்யத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு, நமக்குரிய வாய்ப்பு ஆகும்.

இது அத்தனையும் ஒரு சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் "விண்ணக சமூகத்தினில் ஒரு கலகம் எழுந்த போது" துவங்கியது (38:69). உயர் அந்தஸ்துடைய படைப்புகளில் ஒருவனான, சாத்தான், அவனுக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட சக்திகள் கடவுளுடன் மற்றொரு தெய்வமாக இருப்பதற்கு அவனைத் தகுதிப்படுத்தி விட்டது என்ற இறுமாப்பான எண்ணங்களை மனதில் கொண்டிருந்தான். இவ்விதமாக அவன் கடவுளின் பரிபூரண அதிகாரத்திற்கு அறைகூவல் விடுத்தான்.

Learn More

உங்களுடைய கடவுள் யார்?

  

 அதிகமான மக்கள் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் கொந்தளித்து விடுகின்றனர். "உங்களுடைய தெய்வம் யார் என்றால், நீங்கள் கூற வருவதென்ன?" என்று அவர்கள் கேட்கின்றனர். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பாளர்தான் என் தெய்வம்." ஆனால் இந்த மக்களில் அதிகமானோர் வானங்கள் மற்றும் பூமியின் படைப்பாளர்தான் அவர்களுடைய தெய்வம் என்ற தங்களுடைய பிரகடனம் உதட்டளவில் என்பதை விட அதிகம் எதுவுமில்லை, மேலும் உண்மையில் அவர்கள் நரகத்திற்கென விதிக்கப்பட்டு விட்டவர்களாக இருக்கின்றனர், என்பதை கண்டு கொள்ளும் போது அதிர்ந்து போனவர்களாக இருப்பார்கள்(12:106). 

Learn More

இக்குர்ஆன்: மீட்சிக்கென உங்களுக்குத் தேவையான அனைத்தும்

  

 19:64ல் குர்ஆனின் வார்த்தைகள் பேசுகின்றன. அது கூறுவதாவது, "உம்முடைய இரட்சகரின் கட்டளைகளுக்கேற்பவே நாங்கள் இறங்கி வருகின்றோம். கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் அவருக்கே உரியதாகும். உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மறப்பதில்லை." உதாரணத்திற்கு, எப்படித் தூங்குவது என நமக்குச் சொல்ல, கடவுள் மறந்து விடவில்லை (18:109, 31:27), ஆயினும், ஹதீஸ் & சுன்னா போன்ற போலிக் கொள்கைகளின் புனைந்துரையாளர்கள் தங்களுடைய சீடர்களுக்கு எப்படித் தூங்குவது. மற்றும் உங்களுடைய நகங்களை எப்படி வெட்டிக் கொள்வது என்றும் கூட கட்டளையிடுகின்ற மார்க்கப் போதனைகளுடன் வந்துவிட்டனர். மக்காவில் உள்ள புனிதப்பள்ளியும் மதினாவின் சட்டவிரோதமான "புனிதப்பள்ளி"யும், களைத்துப்போன தரிசிக்க வந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் குப்புறப் படுத்துத் தூங்கி விட்டால் அவர்களை ஒரு குச்சியால் அடிப்பதற்காகச் சில தனிநபர்களைப் பணிக்கமர்த்துகின்றன! 

Learn More

கடவுள் ஏன் இப்பொழுது ஒரு தூதரை அனுப்பினார்?

  

3:81, மற்றும் பின் இணைப்பு 2-ல் கூறப்பட்டுள்ளபடி, நபிமார்கள் அனைவராலும் சேர்ப்பிக்கப்பட்ட தூதுச் செய்திகளை ஒருங்கிணைத்து அவற்றைத் தூய்மைப்படுத்தி அத்துடன் அவற்றை சரணடைதல் எனும் ஒரே மார்க்கமாக ஒன்றிணைப்பதற்காகக் கடவுள் ஒரு தூதரை அனுப்பியுள்ளார். கீழ்க்கண்ட காரணங்களினால், முக்கியமான இந்த முன்னறிவிப்பினை நிறைவேற்றுவதற்குரிய காலம் நிச்சயமாக கனிந்துவிட்டது.

1. யூதமதம், கிறிஸ்துவம், மற்றும் இஸ்லாம் ஆகியவை அடையாளங்காண முடியாதவாறு சீர்கெடுக்கப்பட்டு விட்டன.

2. கடவுளின் தூதுச்செய்திகள் அனைத்தும் சேர்ப்பிக்கப்பட்டு விட்டன; சூர்ஆன்தான் இறுதி ஏற்பாடாக உள்ளது.

3. இந்த உலகத்தில் வாழ்வதற்கென விதிக்கப்பட்டுள்ள மானிட இனத்தவர்களில் 93% க்கும் அதிகமானோர் இனிமேல்தான் வர இருக்கின்றனர்.அறிமுகவுரையில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி,பக்கம் xiv, ஆதம் முதல் இந்தப் பூமியில் வசித்த மக்கள், எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த மக்கள் தொகையில் பதினைந்தில் ஒரு பங்கினராகவே உள்ளனர்.

Learn More

தீர்மானிக்கின்ற வயதான 40

  

பொறுப்பேற்படுதலுக்கு உரிய வயது என்ன? கடவுளைப் பற்றிக் கேள்விப்படாமலேயே, 12 வயதில் ஒரு குழந்தை இறந்து விட்டால், இந்தக் குழந்தை சுவனத்திற்குச் செல்லுமா, அல்லது நரகத்திற்கா? அக்குழந்தை 15 அல்லது 21. அல்லது 25 வயதில் இருந்தால் அப்போது என்ன நிலை? எத்தனை வயதில் மானிட இனத்தவர் அவனுடைய அல்லது அவளுடைய நம்பிக்கைக்குப் பொறுப்பாகப் பிடிக்கப்படுவார்? நீண்டதொரு காலமாக இந்தக் கேள்வி அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைப் புதிரில் ஆழ்த்தி வந்துள்ளது.

Learn More

முஹம்மத் தன் சொந்தக் கரத்தால் கடவுளின் வெளிப்பாடுகளை எழுதினார்

  

படிப்பீராக", என்பதாக இருந்தது, அத்துடன் “பேனாவெனும் சாதனத்தின் மூலம் கடவுள் கற்றுக் கொடுக்கின்றார்" (96:1-4) என்ற வாக்குமூலத்தை உள்ளடக்கியதாகவும் இருந்தது, மேலும் இரண்டாவது வெளிப்பாடும் "பேனா"(68:1) ஆகவே இருந்தது. பேனாவின் ஒரே பயன்பாடு எழுதுவதேயாகும்.

Learn More

முஹம்மத் நபியின் பணி

முஹம்மத் நபியின் பணி

 

நபியுடைய ஒரே இறைப்பணியானது குர்ஆனைச் சேர்ப்பிப்பதே: முழுமையான குர்ஆன், குர்ஆனைத் தவிர எந்த ஒன்றுமில்லை [3:20: 5:48-50, 82, 88: 8:18: 13:40; 16:35, 82; 24:54; 20:18; 42:48; 64:12).

வேறு எதனையும் செய்வுதற்கு நபிக்கு நேரம் எதுவும் இருந்திடாத அளவுக்கு இக்குர்ஆனைச் சேர்ப்பித்தல் அத்தகையதொரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிரம்மாண்டமான பணியாக இருந்தது. இன்னும் கூடுதலாக, இக்குக்ஆளை அன்றி எந்த மார்க்கப் போதனைகவளயும் வெளியிடுவதில் இருந்து மிகக் கடுவமயான வார்த்தைகளால் நபியானவர் தடுக்கப்பட்டிருந்தார் (68:36-47). இக்குர்ஆனை விளக்குவதிலிருந்தும் கூட அவர் தடுக்கப்பட்டிருந்தார் (75:15-19). கடவுள்தாள் இக்குர்ஆனுடைய ஒரே ஆசிரியராக இருக்கின்றார் (55:1-2), 

Learn More

Articles

Video

Check out this great video

Downloads

Puthiya-Ninaivoota-Book13-Sep-2000 (pdf)

Download

Puthiya-Ninaivootal-April-2000-book-8 (pdf)

Download

PUTHIYA-NINAIVOOTAL-APRIL-2021-Book-20 (pdf)

Download

Puthiya-Ninaivootal-Aug-2000-Book-12- (pdf)

Download

PUTHIYA-NINAIVOOTAL-AUG-2001-BOOK-24 (pdf)

Download

Puthiya-Ninaivootal-Dec-1999-book-4 (pdf)

Download

Puthiya-Ninaivootal-Dec-2000-Book-16- (pdf)

Download

Puthiya-Ninaivootal-Feb-2000-book-6 (pdf)

Download

Puthiya-Ninaivootal-jan-2000-book-5- (pdf)

Download

Puthiya-Ninaivootal-july-2000-book-11 (pdf)

Download

PUTHIYA-NINAIVOOTAL-JULY-2001-BOOK-23 (pdf)

Download

PUTHIYA-NINAIVOOTAL-JUN-2001-BOOK-22 (pdf)

Download

Puthiya-Ninaivootal-March-2000-book-7 (pdf)

Download

PUTHIYA-NINAIVOOTAL-MAY-2001-BOOK-21 (pdf)

Download

Puthiya-Ninaivootal-Nov-1999-Book-3- (pdf)

Download

Subscribe

Get 10% off your first purchase when you sign up for our newsletter!

Contact Me

Questions or Comments

Send me a message or ask me a question using this form. I will do my best to get back to you soon!

God Alone

Get in Touch!

Attach Files
Attachments (0)

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Cancel

Social


Copyright © 2025 God Alone - All Rights Reserved.

  • Submission to GOD Alone

Powered by

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept